தருமபுரி கோட்டை ஸ்ரீ வர மகாலட்சுமி உடனமர் ஸ்ரீ பரவாசுதேவ கோயிலில், வைகுண்ட ஏகாதசி விழா கொண்டாடப்பட உள்ளது. இதனை ஒட்டி பரமபதம் வாசல் வழியாக சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சிக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தர உள்ளனர். எனவே, சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு 33ஆவது ஆண்டாக பிரசாதம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தருமபுரியில் 1 லட்சம் லட்டுகள் தயாரிக்கும் பணி தீவிரம்! - laddu making in tamil
தருமபுரி கோட்டை கோயிலின் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்வை முன்னிட்டு, ஒரு லட்சம் லட்டுகளை தயார் செய்யும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
![தருமபுரியில் 1 லட்சம் லட்டுகள் தயாரிக்கும் பணி தீவிரம்! தருமபுரியில் 1 லட்சம் லட்டுகள் தயாரிக்கும் பணி தீவிரம்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-17353472-thumbnail-3x2-laddu.jpg)
தருமபுரியில் 1 லட்சம் லட்டுகள் தயாரிக்கும் பணி தீவிரம்!
தருமபுரி கோட்டை கோயிலின் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்வை முன்னிட்டு, ஒரு லட்சம் லட்டுகளை தயார் செய்யும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது
இதற்காக 1 லட்சம் லட்டுகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. கோயிலின் வளாகத்தில் நடைபெற்று வரும் இந்த லட்டு தயாரிப்பு பணியில், இரவு பகலாக பல சமையல் கலைஞா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.
இதையும் படிங்க:ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி: பகல்பத்து 8ஆம் திருவிழா உற்சவம்