தர்மபுரி: நாட்டின் 75ஆவது சுதந்திர தினவிழா நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தர்மபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் வண்ண பலூன்கள் பறக்கவிடப்பட்டன. அமைதியையும், சமாதானத்தையும் வலியுறுத்தும் வகையில் வெண் புறாக்கள் வானில் பறக்க விடப்பட்டன. திறந்தவெளி வாகனத்தில் சென்று காவல்துறை அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டு ஆட்சியர் ஏற்றுக் கொண்டார். ரூ.52.53 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 30 பயனாளிகளுக்கு வழங்கினார்.