தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தொடர்ந்து மூன்று நாள்களாக நீர்வரத்து உயர்ந்து வருகிறது. கர்நாடக மாநிலம், கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து ஆறாயிரத்து 491 கனஅடி நீரும், கபினி அணையில் இருந்து ஆயிரம் கனஅடி நீரும் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
நீர்வரத்து அதிகரிப்பு - ஒகேனக்கல்லில் ஆர்ப்பரித்து கொட்டும் அருவி - கிருஷ்ணராஜ சாகர் அணை
தர்மபுரி : ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்து 16 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது.
Increased water supply in hogenakkal
இரு அணைகளில் மொத்தமாக இருந்தும் ஏழாயிரத்து 491 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. கடந்த இரு தினங்களாக கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டப் பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக ஒகேனக்கல்லில் நீர்வரத்து 14 ஆயிரம் கன அடியிலிருந்து உயர்ந்து 16 ஆயிரம் கன அடியாக உள்ளது.
இந்நிலையில், அதிக நீர்வரத்து காரணமாக ஒகேனக்கல் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.
Last Updated : Oct 20, 2020, 12:34 PM IST