கர்நாடக மாநிலத்தின் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து நீர் திறப்பு கடந்த சில நாள்களுக்கு முன்பு அதிகரிக்கப்பட்டது. இதன் காரணமாக தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 8 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்பட்டது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு - கபினி அணை
தர்மபுரி: கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து நீர் திறப்பு காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 8 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
இதற்கிடையே, ஒகேனக்கல் பகுதிக்கு சுற்றுலா பயணிகள் வருகைக்கு தர்மபுரி மாவட்ட நிர்வாகம் கடந்த தடை விதித்ததால் ஒகேனக்கல் பகுதிகளில் ஆள்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
இச்சூழலில்,தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 23ஆம் தேதி முதல் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கடந்த 5 மாதங்களுக்கு மேலாக ஒகேனக்கல் பகுதியில் கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக சுற்றுலாப் பயணிகள் வருகைக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
இந்தத் தடை உத்தரவால் ஒகேனக்கல் சுற்றுலாவை நம்பியுள்ள பரிசல் ஓட்டிகள், மீன் உணவு சமைப்பவர்கள், மசாஜ் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பின்றி வறுமையில் உள்ளனர்.
தர்மபுரி மாவட்ட நிர்வாகம் ஒகேனக்கல் பகுதிக்கு கட்டுப்பாடுகளுடன் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.