தர்மபுரி:தென்மேற்குப் பருவமழை தீவிரம் அடைந்ததால் கர்நாடகா, கேரளா மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும் கர்நாடகா, தமிழ்நாடு காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இதனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து விநாடிக்கு 36 ஆயிரம் கனஅடி நீர் தமிழ்நாடு காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.