தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு.., 9 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை...! - tamilnadu flood alert

காவிரி ஆற்றில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் கனஅடி நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என ஒன்பது மாவட்ட ஆட்சியர்களுக்கு மத்திய நீர் ஆணையம் முன்னெச்சரிக்கை விடுத்துள்ளது.

காவேரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு.., 9 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய முன் எச்சரிக்கை...!
காவேரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு.., 9 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய முன் எச்சரிக்கை...!

By

Published : Aug 27, 2022, 6:54 PM IST

தர்மபுரி:காவிரி கரையோர பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மத்திய நீர் ஆணையம் இன்று(ஆக.27) கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களின் ஆட்சித் தலைவர்களுக்கு கடிதம் மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை அறிவுறுத்தியுள்ளது.

இக்கடிதத்தில் கேரளா - கர்நாடக காவிரி கரையோர பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக நாளை(ஆக.28) நீர்வரத்து ஒரு லட்சத்து 20 ஆயிரம் கனஅடியாக அதிரிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் , தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து காலையில் 70 ஆயிரம் கனஅடியாகவும், மாலை நிலவரப்படி ஒரு லட்சத்து 8 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: ஒகேனக்கலில் 70 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்பு


ABOUT THE AUTHOR

...view details