தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் பெய்துவரும் மழையால் பூக்கள் வரத்து அதிகமாக இருந்தது. ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகைகளை ஒட்டி பூக்கள் விலை அதிக அளவில் இருந்தது.
தருமபுரி மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக பூக்கள் விளைச்சல் அதிகரித்தது. இதனால் தருமபுரி நகரப் பேருந்து நிலையத்தில் செயல்பட்டுவரும் பூச்சந்தைக்கு பூக்கள் வரத்து அதிகரித்து.
கடந்த ஒரு வாரமாக பூக்களின் விலை குறைந்து விற்பனையானது. இன்று ஆயுத பூஜை பண்டிகை என்பதால், பூக்களின் விலை அதிகரித்துள்ளது.
பூக்கள் சந்தையில் சன்னமல்லி கிலோ 300 ரூபாயிலிருந்து 500 ரூபாய்க்கும், 400 ரூபாய்க்கு விற்பனையான குண்டுமல்லி கிலோ 600 ரூபாய்க்கும், கனகாம்பரம் கிலோ 500 லிருந்து 600 ரூபாய் என அதிகரித்து விற்பனையாகிறது.
மேலும் அரளிப்பூ கிலோ 180 லிருந்து 300 ரூபாய்க்கும், சாமந்தி கிலோ 70 லிருந்து 130 ரூபாய் என ஒரு மடங்கு உயர்ந்து விற்பனையாகிறது. சம்பங்கிப்பூ கிலோ ரூ.260, சென்டுமல்லி கிலோ ரூ.30, பட்டன் ரோஸ் ரூ.200-க்கு, கோழி கொண்டை ரூ.30 என விற்பனையானது.
பூக்கள் வரத்தும் உயா்ந்து விற்பனை நடைபெற்றாலும் நான்கு நாள்களாகப் பெய்த தொடர் மழையால் பூக்கள் அவ்வப்போது அழுகி வரத்து குறைந்துள்ளது. இதனால் உழவர்கள் கவலை அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: ’நாட்டில் நல்லிணக்கம், வளம், நல்ல உடல் நலம் பெருகட்டும்’ -ஆளுநர் ஆயுத பூஜை வாழ்த்து