தருமபுரி: ஒகேனக்கல்லில் ஒரே நாளில் 70 மில்லி மீட்டர் கனமழை மற்றும் கர்நாடக அணைகளில் நீர்த்திறப்பு அதிகரிப்பால், 3 நாட்களுக்கு பிறகு தமிழகத்திற்கு நீர்வரத்து வினாடிக்கு 5000 கன அடியிலிருந்து 6000 கன அடியாக அதிகரித்து உள்ளன. கர்நாடகா அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் வினாடிக்கு 4,700 கன அடியாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
நேற்று (செப் - 21) இரவு, ஒகேனக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் 70 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளன. ஒகேனக்கல்லில் பெய்த கனமழை, கர்நாடகா அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட நீர் மற்றும் பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து காரணமாக இன்று நீர்வரத்து 6,000 கன அடியாக உயர்ந்துள்ளன.
கடந்த, மூன்று நாட்களாக நீர்வரத்து 5 ஆயிரம் கன அடியாக இருந்த நிலையில் தண்ணீர் வரத்து காரணமாக ஒகேனக்கல் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டி பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சியளித்து வருகின்றன. மேலும், காவிரி ஆணையம் கர்நாடக அணைகளில் இருந்து 15 நாட்களுக்கு நீர் திறப்பு வினாடிக்கு 5000 கன அடி அதிகரிக்கப்பட்டால், மேலும் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மத்திய நிர்வாக ஆணைய அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.