தர்மபுரி: அரூர் திருவிக நகரில் வசிக்கும் ஆசிரியர் குமார் என்பவரது வீட்டில் அதிமுகவினர் பணம் பதுக்கி வைத்திருப்பதாக தேர்தல் நடத்தும் அலுவலரும் கோட்டாச்சியருமான முத்தையனுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் பேரில் அங்கு விரைந்த தேர்தல் பறக்கும் படையினர், அந்த வீட்டை மறைமுகமாக கண்காணித்து வந்தனர்.
அப்போது குமார் தனது வீட்டிலிருந்து ஒரு பையில் பணத்தைக் கட்டி வெளியில் வீசியுள்ளார். அந்தப் பணத்தை அதிமுகவைச் சேர்ந்த நேதாஜி என்பவர் எடுத்துச் சென்றுள்ளார். இதைப் பார்த்துக்கொண்டிருந்த தேர்தல் பறக்கும் படையினர், நேதாஜியை கையும்களவுமாக பிடித்து அவரிடமிருந்த 16 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.
அரூரில் அதிமுக நிர்வாகிகள் வீட்டில் வருமான வரித்துறை சோதனை தொடர்ந்து அவரிடம் விசாரித்தபோது, அதிமுகவைச் சேர்ந்த சரவணன் என்பவர் குமார் வீட்டிற்கு தன்னை வரவழைத்ததாகவும், இது தேர்தலுக்கான பணம் எனவும் ஒப்புதல் அளித்தார். தொடர்ந்து வருமான வரித்துறையினர் அந்த வீட்டில் இருந்த குமாரின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தியதில் அதிமுக ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் ஆர்.ஆர்.பசுபதி என்பவர் இவரிடம் பணத்தைக் கொடுத்து நேதாஜியிடம் கொடுக்கமாறு அறிவுறுத்தியுள்ளது தெரியவந்தது.
இது தொடர்பாக, வழக்கறிஞர் பசுபதி, டாக்டர் சரவணன், ஆசிரியர் குமார், நேதாஜி உள்ளிட்டோர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். தொடர்ந்து பசுபதியின் வீடு, அவரது உறவினர் வீடு, அவரது கோழிப்பண்ணைகளில் சோதனையிட்டதில் உரிய ஆவணங்கள் இல்லாத ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.
அரூரில் அதிமுக நிர்வாகிகள் வீட்டில் வருமானத் வரித்துறை சோதனை தொடர்ந்து அதிமுக நிர்வாகிகளுக்கு நெருக்கமான ஒப்பந்ததாரர்கள் சிவக்குமார், செல்வகுமார், அரூர் அதிமுக நகரச் செயலாளர் பாபு, முன்னாள் நகரச் செயலாளர் அ.செ.ராஜா, நகர அம்மா பேரவை செயலாளர் கேபிள் செந்தில் என அதிமுகவினரின் வீட்டில் அடுத்தடுத்து சோதனையில் வருமான வரித்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.