தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தர்மபுரியில் இரண்டரை கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களை வழங்கிய எம்எல்ஏக்கள்! - அரசு நலதிட்டங்களை வழங்கிய சட்டப்பேரவை உறுப்பினர்

பாப்பிரெட்டிப்பட்டி, அரூா் ஒன்றியங்களில் 2,246 பயனாளிகளுக்கு 2,77,00,000 மதிப்பிலான அரசு நலத்திட்டங்களை சட்டப்பேரவை உறுப்பினர்கள் பயனாளிகளுக்கு வழங்கினார்கள்.

அரசு நலதிட்டங்களை வழங்கிய சட்டப்பேரவை உறுப்பினா்கள்
அரசு நலதிட்டங்களை வழங்கிய சட்டப்பேரவை உறுப்பினா்கள்

By

Published : Dec 24, 2020, 7:08 AM IST

தர்மபுரி: மாவட்டத்தில் பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் ஒன்றியங்களில் 2,246 பயனாளிகளுக்கு 2,77,00,000 மதிப்பிலான அரசு நலத்திட்டங்களைச் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பயனாளிகளுக்கு வழங்கினார்கள்.

அரசு நலத் திட்டங்களை வழங்கிய சட்டப்பேரவை உறுப்பினா்கள்
தர்மபுரி மாவட்டம் அரூர் ஒன்றியத்தில் தமிழ்நாடு அரசின் வருவாய்த் துறை, வேளாண்மைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று (டிச. 23) நடைபெற்றது.
இவ்விழாவில் 44 லட்சம் மதிப்பில் 605 நபர்களுக்கு குடும்ப அட்டைகள், முதியோர் ஓய்வூதியம், திருமண உதவித்தொகை உள்ளிட்ட அரசின் நலத்திட்ட உதவிகளை அரூர் சட்டப்பேரவை உறுப்பினர் வே. சம்பத்குமார் வழங்கினர்.
அரசு நலத்திட்டங்களை வழங்கிய சட்டப்பேரவை உறுப்பினர்

தர்மபுரி ஒன்றியத்தில் உள்ள 855 நபர்களுக்கு ரூபாய் ஒரு கோடியே 80 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், பாப்பிரெட்டிப்பட்டியில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 754 நபர்களுக்கு 87 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பிலும் அரசு நலத்திட்ட உதவிகளை பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவை உறுப்பினர் ஆ. கோவிந்தசாமி வழங்கினார்.

இதையும் படிங்க:கலகலக்கும் வண்ணமிகு அரக்கு வளையல்கள்

ABOUT THE AUTHOR

...view details