தருமபுரி நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் அரிசி, நெல் ஆகியவையை ரயிலிலிருந்து இறக்கி லாரிகளில் ஏற்றும் பணியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் பணியாற்றிவருகின்றனர். இங்கு பணியாற்றக்கூடிய சுமை தூக்கும் தொழிலாளர்களில் 50 சதவீதம் பேர் 45 வயதைக் கடந்தவர்கள்.
ஒவ்வொருவரும் 20 ஆண்டுகள் 25 ஆண்டுகள் சுமை தூக்கும் தொழிலாளியாகவே தங்கள் வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர். மாதத்திற்கு ஐந்து முதல் 6 நாள்கள் மட்டுமே இவர்களுக்கு வேலை கிடைக்கிறது. இவர்களின் மாத வருவாய் 5 ஆயிரம் முதல் 7 ஆயிரம் வரை மட்டுமே. குறைந்த வருவாயைக் கொண்டு தங்களது குடும்பத்தின் அத்தியாவசிய தேவையான உணவு தேவையைப் பூர்த்தி செய்து வருகின்றனா்.