தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"மாணவர்கள் நலன்களுக்கு உரிய முக்கியத்துவம் தரப்படுகிறது" - உயர் கல்வித் துறை அமைச்சர்! - buses opening

தருமபுரி: பாலக்கோடு பேருந்து நிலையத்தில் இருந்து புதிய வழித்தடங்களுக்கு பேருந்துகளை உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

new bus

By

Published : Aug 16, 2019, 8:37 PM IST


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேருந்து நிலையத்தில் மாணவர்களின் பயன்பாட்டிற்காக புதிய வழித்தடங்களில் செல்லும் பேருந்துகளை தொடங்கி வைத்தார்.அப்போது அவர் செய்தியாலளர்களிடம் கூறுகையில்,

இந்த கல்வி ஆண்டு முதல் 45 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 81 புதிய பாடப்பிரிவுகள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. அதில் இளநிலை படிப்பில் 69 பாடப்பிரிவுகளும், முதுநிலை படிப்பில் 12 பாடப்பிரிவுகளும் புதிதாக தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்த உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன்

இதனைத் தொடர்ந்து, பாலக்கோடு அரசு கலை அறிவியியல் கல்லூரியில் 7 பாடப்பிரிவுகளும், காரிமங்கலம் அரசு பெண்கள் கலை அறிவியியல் கல்லூரியில் ஒரு பாடப் பிரிவும், தருமபுரி அரசு கலை அறிவியியல் கல்லூரியில் ஒரு பாடப் பிரிவும் புதிதாக தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய பாடப்பிரிவுகளில் சேரவதற்க்கு இக்கல்லூரிகளில் ஏற்கனவே விண்ணப்பித்தவர்களும், புதிதாக விண்ணப்பங்கள் அளித்தும் சேர்ந்து கொள்ளலாம்.மேலும் மாணவர்கள் கல்லூரிகளுக்கு சென்று வருவதற்க்கு பென்னாகரத்தில் இருந்து பாலக்கோடு வரும் அரசு பேருந்தை வெள்ளிச்சந்தை வரை இயக்கப்படும்.

உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன்

இதேபோன்று தருமபுரியில் இருந்து ஓசூர் செல்லும் அரசு பேருந்தை ஜக்கசமுத்திரம் வழியாக இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.மாணவர்களின் தேவையை கருத்தில் கொண்டு தமிழ் நாடு அரசு செயல்பட்டு வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details