தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தருமபுரியில் வெல்லம் உற்பத்தி பாதிப்பு! - வெல்லம் உற்பத்தி பாதிப்பு

தருமபுரி மாவட்டத்தில் ஏற்றுமதி இல்லாத காரணத்தினால் வெல்லம் உற்பத்தி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

வெல்லம் உற்பத்தி பாதிப்பு
வெல்லம் உற்பத்தி பாதிப்பு

By

Published : Jul 12, 2020, 3:55 AM IST

தருமபுரியில் கடகத்தூர், முத்துக்கவுண்டன்கொட்டாய், பாப்பாரப்பட்டி, பாலக்கோடு உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட பகுதிகளில் வெல்லம் உற்பத்தி செய்யும் சிறு ஆலைகள் இயங்கி வருகின்றன.

இங்கு உற்பத்தி செய்யப்படும் வெல்லம் தமிழ்நாடு மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்நிலையில் கரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த சில மாதங்களாக ஆலைகள் இயங்காமல் மூடப்பட்டு இருந்தது. மேலும் தமிழ்நாடு அரசு ஐந்தாம் கட்ட ஊரடங்கில் சிறு குறு தொழிற்சாலைகள் நடத்த அனுமதி அளித்தது. ஆனால் வாகன போக்குவரத்து சரிவர இல்லாததாலும், கரும்பு வரத்து குறைந்ததாலும் வெல்லம் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஏற்றுமதி இல்லாததால் வெல்லம் உற்பத்தி பாதிப்பு

தற்போது 50 சதவீத வெல்லம் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில் அடுத்தடுத்து வரும் மாதங்களில் விநாயகர் சதுர்த்தி, விஜயதசமி, தீபாவளி போன்ற பண்டிகைகள் வருவதால் வியாபாரிகள் முன்பதிவு செய்வார்கள்.

ஆனால் கரோனா பாதிப்பு காரணமாக வெல்லம் தேவைக்காக முன்பதிவுகள் இல்லை. இதனால் இத்தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனா் என்று வேதனையாக தெரிவித்தனர்.

இதையும் படிங்க:'வேளாண் சங்கங்களில் கடன் பெறுவது எளிதாக்கப்படும்' - அமைச்சர் காமராஜ்!

ABOUT THE AUTHOR

...view details