கரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், தருமபுரி மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் சாராயம் காய்ச்சப்பட்டு ஆங்காங்கே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தருமபுரி அருகே 5 பேரல்களில் இருந்த ஆயிரத்து 100 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் - கரோனா வைரஸ் தொற்று
தருமபுரி: அரூர் அடுத்த எஸ்.பட்டி கிராமத்தில் ஆயிரத்து 100 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டு 5 பேரல் சாராய ஊறல்கள் உடைக்கப்பட்டன.
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள எஸ்.பட்டி கிராமத்தில் காட்டுப்பகுதியில் சாராய ஊறலை புதைத்து சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அரூர் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் துறையினர் எஸ்.பட்டி, வாதப்பட்டி காட்டுப்பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் வாதப்பட்டி காட்டுப் பகுதியில் மண்ணில் பானை மற்றும் பேரல் புதைக்கட்டிருந்தது தெரியவந்தது.
இதில் 5 பேர்களில் இருந்த ஆயிரத்து 100 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்த காவல் துறையினர், சாரய ஊறல் பேரல்கள் மற்றும் மண் பானைகளை வனப்பகுதியிலேயே அடித்து உடைத்து நொறுக்கினர். தொடர்ந்து வனப்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி தலைமறைவானவர்களை தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: போலி டாஸ்மாக் டோக்கன் அச்சடித்து மது வாங்க வந்த 10 பேர் கைது!