தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அன்புமணியை வீழ்த்திய செந்தில்குமார் சபதம்! - senthil kumar

தருமபுரி: மண்ணின் மைந்தனாகிய என்னை தேர்தெடுத்த தருமபுரி மக்களுக்கு நலத்திட்டங்களை நிச்சயம் செய்வதாக திமுக சார்பில் அத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

செந்தில் குமார்

By

Published : May 24, 2019, 7:44 AM IST

தருமபுரி மக்களவைத் தேர்தல் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக வேட்பாளர் செந்தில் குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, " சிறந்த வேட்பாளர் அன்புமணி அவரை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றிபெற்று வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் மண்ணின் மைந்தன். தருமபுரி மக்களுக்கான நலத்திட்டங்களை நிச்சயம் செய்து தருவேன் என்ற முழக்கத்தோடு தேர்தலை சந்தித்தேன். மக்கள் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் என்னை வெற்றி பெறச் செய்தார்கள். மகிழ்ச்சியளிக்கிறது.

செந்தில் குமார்

குடிநீர், சாலை வசதி, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த, மலைவாழ் மக்களுக்கு சாலை வசதிகளை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம். காவிரி உபரி நீர் திட்டம் உள்பட நீர்ப்பாசனத் திட்டங்கள் அனைத்தும் மக்கள் பயன்பெறும் வகையில் கொண்டுவருவோம்.

அரசுப் பள்ளிகளில் பெண் குழந்தைகளுக்கு சானிட்டரி நாப்கின் இலவசமாக வழங்க ஏற்பாடு செய்வோம். மத்திய மாநில அரசுகள் நிதி ஒதுக்கீடு வழங்காத பட்சத்தில் மக்களோடு ஒன்றிணைந்து செயல்படுத்துவேன். மக்களின் பிரச்னைகளை அறிந்து அவர்கள் இல்லத்திற்கே சென்று கேட்டறிந்து மக்கள் தொண்டாற்றுவேன்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details