தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஓசூர் சனத்குமாரா நதியில் வெள்ளப்பெருக்கு - 20 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு - மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்

ஓசூர் அடுத்த கெலமங்கலம் அருகே சனத்குமாரா நதியில் வெள்ளப்பெருக்கு தரைப்பாலம் அடித்துச் சென்றதால் 20 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

ஓசூர் சனத்குமாரா நதியில் வெள்ளப்பெருக்கு
ஓசூர் சனத்குமாரா நதியில் வெள்ளப்பெருக்கு

By

Published : Oct 20, 2022, 10:52 PM IST

தர்மபுரி: ஓசூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளான தேன்கனிக்கோட்டை கேலமங்கலம் , பாகலூர்,சூளகிரி ஆகிய பகுதிகளில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. பலத்த மழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஓசூர் அடுத்த கெலமங்கலம் பகுதியில் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

கெலமங்கலம் பகுதியில் பலத்த மழை பெய்ததால் சனத்குமாரா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் காலேபள்ளி அருகே தரைப்பாலம் துண்டிக்கப்பட்டதால் சுமார் 20 கிராமங்களுக்கு செல்ல முடியாமல் அந்தப் பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

ஓசூர் சனத்குமாரா நதியில் வெள்ளப்பெருக்கு

சனத்குமார் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் தரைப்பாலம் துண்டிக்கப்பட்ட நிலையில் லட்சுமிபுரம் பெரிய பாலகுளி, சின்ன பாலகுளி பேவநாதம்,குள்ளட்டி ஆகிய 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

வெள்ளப்பெருக்கால் தரை பாலம் அடித்து சென்றதால் அந்த பகுதி மக்கள் சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் சுற்றி கெலமங்கலம் பகுதிக்கு வருகின்றனர்.

இதையும் படிங்க:ஒகேனக்கல்லில் நீர்வரத்து 1.25 ஆயிரம் கனஅடியாக குறைவு

ABOUT THE AUTHOR

...view details