தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காதலர்களை சென்றடையாத ரோஜாக்கள் - கவலையில் விவசாயிகள்! - dharmapuri rose formers

தர்மபுரி : காதலர் தினத்தை முன்னிட்டு ரோஜா பூக்கள் ஏற்றுமதி இல்லாததால் ஓசூர் ரோஜா மலர் சாகுபடியாளர்கள் வேதனையடைந்துள்ளனர்.

hosur_lovers_day_rose_sale
hosur_lovers_day_rose_sale

By

Published : Feb 11, 2021, 5:12 PM IST

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் ரோஜா மலர் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். ஓசூர் பகுதியில் மண்வளம், சீரான தட்பவெப்ப நிலை நிலவுவதால் ரோஜா மலர்கள் சாகுபடியில் விவசாயிகள் அதிக அளவு ஈடுபடுகின்றனர். பசுமை குடில்கள், திறந்த வயல்வெளி மூலம் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் ரோஜா மலர்கள் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன.

ஓசுரிலிருந்து மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுவந்தது. இதன் மூலம் இங்குள்ள விவசாயிகள் அதிக அளவு வருவாய் ஈட்டி வந்தனர். பெரும்பாலும் காதலர் தினம் கொண்டாட்டத்திற்காக இப்பகுதியில் இருந்து ஒரு கோடி ரோஜா மலர்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்தனர்.

இந்நிலையில் சென்ற ஆண்டு கரோனா பரவல் காரணமாக ஏற்றுமதி இல்லாமல் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த ஆண்டு கரோனா பரவல் குறைந்ததால் காதலர் தினத்தில் மலர் ஏற்றுமதி ஆகும் என்ற நம்பிக்கையில் காத்திருந்த விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் மலர்கள் ஏற்றுமதி ஆகாததால் மிகுந்த வேதனையடைந்துள்ளனர்.

இதையும் படிங்க:

தை அமாவாசையை முன்னிட்டு ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு வழிபாடு

ABOUT THE AUTHOR

...view details