தருமபுரி பேருந்து நிலையத்தில் உள்ள கட்டண கழிப்பறைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றில் திமுக மக்களவை உறுப்பினர் செந்தில்குமார் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
'மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்கான வசதிகள் ஏற்படுத்தப்படும்': திமுக எம்.பி. - dmk mp senthilkumar
தருமபுரி: அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தேவையான கருவிகள், மேல் சிகிச்சைக்கான வசதிகளை ஏற்படுத்தி தரப்படும் என திமுக மக்களவை உறுப்பினர் செந்தில்குமார் உறுதியளித்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் உள்ள நகராட்சி கட்டண கழிப்பறைகள் பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது என்பதால், சில இடங்களில் பழுதாகி உள்ளது. இதனை ஆய்வு செய்து சுகாதாரமாக பராமரிக்க வேண்டும். தருமபுரி மாவட்டம் பின்தங்கி இருப்பதால், நெற்குந்தி பகுதியில் மத்திய அரசு அறிவிக்கப்பட்ட ராணுவ தளவாட மையம் விரைந்து செயல்படுத்தப்பட வேண்டும் என, மத்திய அமைச்சரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தேவையான கருவிகள், மேல் சிகிச்சைக்கான வசதிகளை ஏற்படுத்தி தரப்படும்” என்றார்.