தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியைச் சேர்ந்தவர் அசோக். இவர் செங்கல்பட்டில் உள்ள தனது உறவினரின் துக்க நிகழ்ச்சிக்கு குடும்பத்தினருடன் கடந்த சனிக்கிழமை சென்றவர் இன்று காலை வீடு திரும்பியுள்ளார். வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது.
மசாலா விநியோகஸ்தர் வீட்டில் கொள்ளையர்கள் கைவரிசை! - அரூர் மசாலா விநியோஸ்தர்
தருமபுரி: அரூரில் மசாலா விநியோஸ்தர் வீட்டில் 5 பவுன் தங்க காசு ரூபாய் 75 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் திருடு போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
gold theft
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அசோக் திறந்த வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 5 பவுன் தங்கக் காசு, 75 ஆயிரம் ரூபாய் திருடு போனது தெரியவந்தது. இதனையடுத்து அரூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அரூர் காவல்துறையினர், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.