தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஒகேனக்கலில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றலாப் பயணிகள் குஷி - dharmapuri

தருமபுரி: ஒகேனக்கலில், கடந்த சில நாட்களாக, பெய்த மழையின் காரணமாக நீர்வரத்து சற்று அதிகரித்துள்ளதால் சுற்றிலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

hokkanekkal receives more water, tourist happy

By

Published : May 17, 2019, 7:53 AM IST

தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகப் பரவலாக மழை பெய்து வருகிறது.

ஒகேனக்கல் காட்டுப் பகுதியில் அதிகளவில் மழை பெய்வதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வரக்கூடிய நீரின் அளவு சற்று உயர்ந்துள்ளது. இதன் காரணமாக சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கோடை விடுமுறையின் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலிருந்து சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கலுக்கு வந்து இங்குள்ள அருவிகளில் குளித்தும் பரிசல் பயணம் செய்தும் தங்கள் கோடை விடுமுறையை உற்சாகமாக கொண்டாடிவருகின்றனர். நீர்வீழ்ச்சி மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று பகுதிகளிலும் ஆண்கள் மட்டுமே குளித்து வந்தனர்.

ஒகேனக்கலில் நீர்வரத்து அதிகரிப்பு


பெண்களுக்குத் தனியாக குளிக்க ஏற்ற இடம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், இன்று ஆண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மூன்று நீர் வீழ்ச்சிகளில் முதலில் உள்ள நீர் வீழ்ச்சியான மெயின் அருவியில் பெண்கள் அதிக அளவு குளித்து உற்சாகமாக விடுமுறையைக் கொண்டாடினர்.

ABOUT THE AUTHOR

...view details