கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு திறந்து விடவேண்டிய ஜூன் மாதத்திற்கான தண்ணீரை கடந்த சில தினங்களுக்கு முன்பு கபினி, கிருஷ்ண ராஜசாகர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறந்து விட்டது.
ஒகேனக்கல்லில் நீர்வரத்து 2,700 கன அடியாக உயர்வு! - ஒகேனக்கலில் நீர்வரத்து அளவு
தருமபுரி: கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு ஜூன் மாதத்திற்கான, தண்ணீரைத் திறந்து விட்டதால், ஒகேனக்கல்லில் நீர் வரத்து 2,700 கன அடியாக உயர்ந்துள்ளது.

Hogenakkal water rises upto 2700 cubic feet
கர்நாடக அணைகளில் திறந்துவிடப்பட்ட நீர் நேற்று (ஜூன் 11) தமிழ்நாடு எல்லையான பிலிகுண்டுலு வந்தடைந்தது. ஒகேனக்கல்லில் நீர்வரத்து நேற்று (ஜூன் 11) 1500 கன அடியாக இருந்த நிலையில், இன்று (ஜூன் 12) மாலை நிலவரப்படி 2 ஆயிரத்து 700 கன அடியாக உயர்ந்துள்ளது.
நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக ஒகேனக்கல் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.