கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளிலிருந்து காவிரியில் கர்நாடக உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. நேற்று (ஆக. 6) காலை 11 மணியளவில் கர்நாடகாவிலிருந்து திறந்துவிடப்பட்ட காவிரி நீர், தமிழ்நாடு எல்லையான பிலிகுண்டுலு வந்தடைந்தது. மேலும், 10,000 கன அடியிலிருந்து படிப்படியாக உயர்ந்து 28 ஆயிரம் கன அடியாக நீர்வரத்துஉயர்ந்தது.
இந்நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து 11 ஆயிரம் கன அடி உயர்ந்து, 39 ஆயிரம் கன அடியாக உள்ளது. தொடர்ந்து கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர் திறப்பு அதிகரித்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.