தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த 10 நாள்களாக நீர்வரத்து தொடர்ந்து சரிந்து வருகிறது. தமிழ்நாடு எல்லையான பிலிகுண்டுலு பகுதிக்கு வரும் நீர்வரத்து விநாடிக்கு 3 ஆயிரம் கனஅடியாக இருந்துவந்தது.
இதைத்தொடர்ந்து இன்று (டிச.22) காலை நிலவரப்படி நீர்வரத்து 2 ஆயிரத்து 500 கனஅடியாக குறைந்துள்ளது.