தர்மபுரிமாவட்டம், பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த சில தினங்களாக நீர்வரத்து படிப்படியாக குறைந்து நேற்று 9500 கன அடியாக நீர்வரத்து இருந்தது. தமிழ்நாடு எல்லைப்பகுதி மற்றும் கர்நாடக காவிரி கரையோரப்பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக மழை பெய்து வருகிறது.
ஒகேனக்கலில் நீர்வரத்து 35ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு - குளிக்கவும் பரிசல்களை இயக்கவும் தடை! மழையின் காரணமாக இன்று ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து திடீரென 35 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. காலை ஆறு மணி நிலவரப்படி 28ஆயிரம் கனஅடியாகவும் 9 மணி நிலவரப்படி 35 ஆயிரம் கன அடியாகவும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
ஒகேனக்கலில் நீர்வரத்து 35ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு - குளிக்கவும் பரிசல்களை இயக்கவும் தடை! இந்த நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல் மெயின் அருவி, சினி அருவி உள்ளிட்டப்பகுதிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. ஆகையால், நீர் வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்கவும் பரிசல் இயக்கவும் தர்மபுரி மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
ஒகேனக்கலில் நீர்வரத்து 35ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு - குளிக்கவும் பரிசல்களை இயக்கவும் தடை! இதையும் படிங்க: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு