கர்நாடக மாநிலத்தில் கடந்த மூன்று வாரங்களாக பெய்த கனமழையின் காரணமாக கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகள் நிரம்பி வழிந்தன. அணையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இரண்டு அணைகளில் இருந்து ஒரு லட்சத்து 20 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
அணைகளில் இருந்து வெளியேறிய உபரி நீர் தமிழ்நாடு எல்லையான பிலிகுண்டுலு பகுதிக்கு கடந்த இரு வாரங்களாக வந்தது. நீர்வரத்து படிப்படியாக உயர்ந்து ஒரு லட்சத்து 30 ஆயிரம் கன அடி வரை அதிகரித்தது. நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வெள்ளை காடாக காட்சி அளித்தது.
ஒகேனக்கல் நீர்வரத்து ஒரு லட்சத்து 10 ஆயிரம் கன அடியாக சரிவு சுற்றுலாப் பயணிகள் வருகைக்கு தர்மபுரி மாவட்ட நிர்வாகம் தடை விதித்து அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் இரண்டாவது வாரமாக தடை நீடிக்கிறது. நேற்று (ஜூலை.18) ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து ஒரு லட்சத்து 20 ஆயிரம் கனஅடியாக இருந்தது.
இன்று (ஜூலை.19) 10 ஆயிரம் கன அடி நீர் குறைந்து ஒரு லட்சத்து 10 ஆயிரம் கனஅடியாக உள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் அளவு குறைக்கப்பட்டதால் நீர்வரத்து மேலும் சரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு - கழுகு பார்வை காட்சி...