காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்துவருவதால் கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாகக் கர்நாடக அணைகளான கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளிலிருந்து மூன்று தினங்களுக்கு முன்பு திறந்துவிடப்பட்ட சுமார் எட்டாயிரம் கன அடி தண்ணீர், தற்போது ஒகேனக்கலுக்கு வந்து கொண்டிருக்கிறது.
ஒகேனக்கல்லில் பரிசல் இயக்கத் தடை! - hogenakkal stops parisal trip
தருமபுரி: காவிரியாற்றில் நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக சுற்றுலாத் தலமான ஒகேனக்கல்லில், பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் எஸ். மலர்விழி தெரிவித்துள்ளார்.
ஒகேனக்கல்
இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பரிசல் இயக்க தடை விதிப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், நீர்வரத்து அதிகரிக்கும் என்பதால் சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கலுக்கு வருவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் மலர்விழி வேண்டுகோள் விடுத்துள்ளார். ஒகேனக்கல்லில் காவல் துறையினர், தீயணைப்பு வீரர்கள் மற்றும் ஊர்காவல் படையினர் தொடர்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.