தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த ஐந்து நாள்களுக்கு முன்பு விநாடிக்கு 250 கன அடியாக இருந்த நீா் வரத்து திடீரென விநாடிக்கு 2 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. தற்போது நீர்வரத்து படிப்படியாக குறைந்து விநாடிக்கு 1,200 கனஅடியாக உள்ளது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து குறைவு! - River Water Level
தர்மபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 1,200 கனஅடியாக குறைந்துள்ளது.
நேற்று (பிப்.28) ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கல்லுக்கு வருகை புரிந்து ஆயில் மசாஜ் செய்தும், சினிஅருவி, மெயின் அருவிகளில் குளித்தும் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதைத் தொடர்ந்து, பரிசல் மூலம் சென்று ஐந்தருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டிச் செல்வதை மகிழ்ச்சியுடன் கண்டுகளித்து மீன் உணவருந்தி மகிழ்ச்சியாக செல்கின்றனர். நீர்வரத்து அதிகரித்ததால் கடந்த வாரத்தை விட இந்த வாரம் சுற்றுலாப் பயணிகளின் வரத்து அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க:ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு!