தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பு! - Hogenakkal Water Flow

தருமபுரி: காவிரி கரையோரப் பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

dharmapuri.hoganakkal  ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பு  ஒகேனக்கல் நீர்வரத்து  ஒகேனக்கல்லில் மழை  Hogenakkal High Water Flow  Hogenakkal Water Flow  Hogenakkal Raining
Hogenakkal Water Flow

By

Published : May 1, 2020, 4:37 PM IST

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகேயுள்ள ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாகக் குறைந்துவந்த நிலையில், நேற்று விநாடிக்கு ஆயிரத்து 400 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருந்தது. இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு இரண்டாயிரம் கனஅடி தண்ணீர் வந்துகொண்டுள்ளது.

கடந்த சில நாள்களுக்கு முன்பு சுமார் 400 கனஅடி தண்ணீர் வரத்து இருந்த ஒகேனக்கல்லில் தற்போது 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் வரத்து உள்ளது. இது குறித்து பொதுப்பணித் துறை அலுவலர்கள் கூறுகையில், "தமிழ்நாடு கர்நாடக காவிரி ஆற்றுப் பகுதியில் மழை பெய்துவருவதால் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

ஒகேனக்கல் அருவி

மேலும் காவிரி ஆற்றில் வரும் தண்ணீரின் அளவை மத்திய ஜல் சக்தி திட்ட அலுவலர்கள் தொடர்ந்து கண்காணித்துவருகின்றனர்" எனத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:பாம்பன் பாலத்தை கடந்து சென்ற மத்திய அரசின் கப்பல்கள்

ABOUT THE AUTHOR

...view details