இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ’தருமபுரியில் கரோனா பரவுதலை தடுக்க கடந்தாண்டு மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, தளர்வுகளுடன் அமலில் உள்ளது.
கரோனா தடுப்பு விதிகள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளன. மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005இன் படி தற்போது அமலில் உள்ள ஊரடங்கு மற்றும் இதர கட்டுப்பாடுகள் அனைத்தும் இம்மாதம் 31ஆம் தேதி நள்ளிரவு 12.00 மணி வரையில் தொடர்ந்து நீட்டிப்பு செய்யப்படுள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் கரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொங்கல் விழாவின் போது ஒகேனக்கல் சுற்றுலாத்தலத்தில் சுற்றுலாப்பயணிகள் அதிகம் வருகைப்புரிய கூடும் என்பதால் இன்று முதல் வரும் 17ஆம் தேதி வரை தொடர்ந்து நான்கு நாள்களுக்கு ஒகேனக்கல் அருவியில் குளிப்பதற்கும், பரிசல் ஓட்டுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.