தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் இருந்து ஒகேனக்கல்லுக்குச் செல்லும் சாலை, வனப்பகுதியின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் இரவு நேரங்களில் யானைகள் சாலை வழியாக இடம்பெயர்வது வழக்கம். சுற்றுலாப் பயணிகள் யானைகள் வனப்பகுதியில் இருப்பதை அறிந்து அதனுடன் செல்பி எடுக்கும் நிகழ்வு தொடா்கதையாகி வருகிறது.
சில இளைஞா்கள் மதுபோதையில், மாலை நேரத்தில் காட்டு பகுதியில் உணவு உண்டிருந்த யானையை துரத்தி செல்பி எடுத்தக் காணொளி தற்போது வெளியாகியுள்ளது. இதன் காரணமாக ஒகேனக்கல் காவல் நிலையம், பென்னாகரம் சோதனைச்சாவடி அருகே காவல்துறையினர் வாகனச் தணிக்கையில் ஈடுபடுகின்றனர்.
அப்போது, மதுபோதையில் இருசக்கர வாகனங்களை ஓட்டி வரும் நபர்களை பிடித்தால், மது போதை ஆசாமிகள் முக்கிய அரசியல் பிரமுகர்களுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு காவல்துறை அலுவலர்களை மிரட்டுவதால், நடவடிக்கை ஏதும் எடுக்காமல் அவர்களை விடுவிக்கின்றனர்.
கர்நாடகா ஆந்திரப் பகுதியிலிருந்து வரும் பதிவுஎண் கொண்ட வாகனங்களில் வரும் சுற்றுலாப்பயணிகளை நடவடிக்கை எடுக்கும் காவல் துறையினர் உள்ளூர் பிரமுகர்கள், அவர்களது உறவினர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை. ஒகேனக்கல் வனப்பகுதியில் யானைகள் சாலையைக் கடப்பது தற்போது அதிகரித்துள்ளது.
தற்போது, நிலவி வரும் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக யானைகள் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு இடம்பெயர்ந்து வருகிறது. இரவு நேரங்களில் வாகன ஓட்டிகளுக்கு யானை இருப்பது தெரியாமல் பயணம் மேற்கொள்ளும்போது யானைகள் இருசக்கர வாகனங்களை துரத்தும் நிகழ்வு நடைபெற்று வருகிறது.
காட்டு யானையை செல்பி எடுக்கும் மதுபோதை ஆசாமிகள் யானைகள் கடக்கும் பகுதியில் சோலார் மின் விளக்குகளை அமைத்தால் இத்தகைய நிகழ்வுகள் ஏற்படாது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த வனப்பகுதியில் யானை தாக்கியதில் விவசாயி ஒருவர் உயிரிழந்தார். சுற்றுலாப் பயணிகள் யானை தாக்குதலில் இருந்து தப்பிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தி, செல்பி எடுக்கும் மதுபோதை ஆசாமிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:வறட்சியால் குடிநீர் தேடி அலையும் யானை