தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கர்நாடக அணைகளில் நீர் திறப்பு குறைப்பு: ஒகேனக்கல்லில் நீர்வரத்து சரிவு - ஒகேனக்கல் நீர்வரத்து சரிவு

தருமபுரி: கர்நாடக அணைகளில் நீர்திறப்பு வினாடிக்கு 46 ஆயிரத்து 432 கனஅடியாக குறைந்ததால் ஒகேனக்கல் நீர்வரத்து விநாடிக்கு 65 ஆயிரம் கனஅடியாக சரிவடைந்துள்ளது.

hoganakkal
hoganakkal

By

Published : Sep 23, 2020, 2:58 PM IST

கர்நாடக மாநிலத்தில் பெய்துவரும் தொடர் கனமழையின் காரணமாக அம்மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன.

இதனால் அணைகளின் பாதுகாப்புக் கருதி, அணைகளுக்கு வரும் நீரின் அளவுக்கு ஏற்ப தமிழகத்திற்கு வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரித்தது.

நேற்று கபினி அணையிலிருந்து விநாடிக்கு 35,000 கனஅடி உபரி நீரும், கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து 37,000 கனஅடி உபரிநீரும் வெளியேற்றப்பட்டது.

இதனால் காவிரி ஆற்றில் தமிழக எல்லைப்பகுதியான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து அதிகரித்து, வினாடிக்கு 80,000 கனஅடியாக அதிகரித்தது.

இந்நிலையில் காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு கபினியிலிருந்து விநாடிக்கு 3,483, கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து விநாடிக்கு 45,488 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.

காவிரி ஆற்றில் நீர்வரத்து 15,000 கனஅடி குறைந்து, வினாடிக்கு 65,000 கனஅடியாக சரிந்துள்ளது. மேலும் மேட்டூர் அணை 95 அடி இருப்பதால், தண்ணீர் ஒகேனக்கல்லில் தேக்கமடைந்துள்ளது. இதனால் ஒகேனக்கல்லில் பாறைகளை மூழ்கடித்த நிலையில் காணப்படுகிறது.

அருவிக்குச் செல்லும் நடைபாதைக்கு மேல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

ABOUT THE AUTHOR

...view details