தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்கவும் பரிசல் சவாரி செய்யவும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கலுக்கு வந்திருந்தனர்.
முன்னதாக, சில வாரங்களுக்கு முன்பு ஒகேனக்கல்லுக்கு 2 லட்சத்து 80 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் வந்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளப்பெருக்கில் ஒகேனக்கல் மெயின் அருவிக்கு செல்லக்கூடிய பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு கம்பி வேலிகள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன.
ஒகேனக்கல் மெயின் அருவியில் குளிக்கத் தடை வெள்ளப்பெருக்கு காரணமாக ஒகேனக்கல் மெயின் அருவியில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடைவிதித்தது. தற்போது ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து 14 ஆயிரம் கன அடியாக குறைந்து வருகிறது. இதனால், ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கல்லில் குளிக்க மற்றும் பரிசல் இயக்க அனுமதி அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். சுற்றுலா பயணிகளின் வேண்டுகோளுக்கிணங்க கோத்திக்கல்பாறை பகுதியில் இருந்து மணல் திட்டு பகுதியில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது.
ஆனால், குளிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.