தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டத்தில் அமைந்துள்ள ஒகேனக்கல் 'தென்னகத்தின் நயாகரா' என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற சுற்றுலாத் தலம் ஆகும். வெளிநாட்டிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கல் அழகைக் காண வருவது வழக்கம். வருடந்தோறும் ஆடி முதல் நாளில் தமிழ்நாட்டின் வட மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் காவிரி ஆற்றில் நீராடி வணங்கி விட்டுச் செல்வர்.
இந்நிலையில் இன்று ஆடி முதல் நாள் என்றாலும், ஒகேனக்கலில் தண்ணீர் வரத்து சுமார் 300 கன அடிக்கும் குறைவாகவே வருவதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்த அளவே காணப்பட்டது. சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கல் மெயின் அருவி, சீனி அருவியில் குளித்தும் பரிசலில் பயணம் மேற்கொண்டும் மகிழ்ச்சி அடைந்தனர்.