தர்மபுரி:கர்நாடக மாநிலத்தின் காவிரி கரையோர பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாகவும் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து நீர் உபரியாக காவிரி ஆற்றில் வெளியேற்றப்படுவதாலும் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து நான்காவது நாளாக தொடர்ந்து அதிகரித்துள்ளது.
நேற்று (அக்.14) காலை நிலவரப்படி நீர்வரத்து 50 ஆயிரம் கனஅடியாக இருந்தது. இன்று (அக்.15) காலையில் 9 மணியளவில் 78 ஆயிரம் கனஅடி ஆகவும் நண்பகல் நிலவரப்படி 85 ஆயிரம் கனஅடி ஆகவும் உள்ளது. நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.