தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிருமி நாசினி தெளிக்கும் இயந்திரத்தை உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்துவது குறித்து உயர் கல்வித்துறை இன்னும் முடிவு செய்யவில்லை. கல்லூரிகள் தற்போது கரோனா வைரஸ் பாதித்த நபர்களுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டத்தைப் பொறுத்தவரையில், அரசு பொறியியல் கல்லூரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரி ஆகிய அரசு கல்லூரிகளில் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்த கரோனா பாதிப்பாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனைகளாகச் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், கல்லூரி மாணவர்களுக்குத் தேர்வு நடத்த இயலாத சூழ்நிலை உள்ளது.