தருமபுரி:பாலக்கோடு அருகே ஈச்சம்பள்ளம் கிராமத்தில் ஒரு குட்டி யானை மற்றும் மூன்று காட்டு யானைகள் அடங்கிய யானைக் கூட்டம் விவசாய நிலத்திற்குள் புகுந்ததால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். இதனையடுத்து பட்டாசு வெடித்து யானையை விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
பாலக்கோடு அருகே ஈச்சம்பள்ளம், கரகூர், சீரியம்பட்டி ஆகிய கிராமத்தில் நேற்றிரவு உணவு மற்றும் தண்ணீர் தேடி 20 வயது கொண்ட 3 யானைகள் மற்றும் ஒரு குட்டி யானை என மொத்தம் 4 காட்டு யானைகள், முருகேசன் என்பவரது நிலத்திற்குள் நுழைந்து விதைக்கப்பட்டிருந்த நெல், தக்காளி உள்ளிட்ட பயிர்களை மிதித்து சேதப்படுத்தியது.
யானையின் பிளிறல் சத்தம் கேட்டு கிராம மக்கள் பாலக்கோடு வனத்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வனத்துறையினர் அப்பகுயில் முகாமிட்டு, பட்டாசு வெடித்து, யானைகளை அருகில் உள்ள மொரப்பூர் காப்புக்காட்டிற்கு 4 காட்டு யானைகளையும் விரட்டினர்.
தருமபுரியில் விவசாய நிலத்தில் புகுந்த யானைக் கூட்டம் - கிராம மக்கள் பீதி இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், அடிக்கடி காட்டு யானைகள் இரவு நேரத்தில் கிராமத்தில் புகுந்து விவசாயப் பயிர்களை அழித்து வருவதாகவும், காட்டு யானைகளை முழுமையாக அடர்ந்த வனப்பகுதிகளுக்குள் கொண்டு செல்ல தமிழ்நாடு அரசு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:யானை பாகன்களுக்கு தாய்லாந்தில் பயிற்சி - தமிழக அரசு ஏற்பாடு!