தர்மபுரி : மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு, கடும்குளிர் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மாதங்களின்படி, கார்த்திகை மாதத் தொடக்கத்திலிருந்து மாசி மாதம் வரை நான்கு மாதங்கள் பனிப் பொழிவு அதிகமாகக் காணப்படும். கார்த்திகை மாதம் தொடங்க இன்னும் ஒரு வாரமுள்ள நிலையில், பனிக் காலம் தொடங்கும் முன்பே மாவட்டத்தில் சில நாள்களாக தொடர்ந்து கடுமையான குளிர் வாட்டிவதைத்து வருகிறது.
அதிகாலையில் தர்மபுரியில் நிலவும் கடும் பனிப்பொழிவு தினமும், மாலை ஆறு மணிக்கு பனி பொழியத் தொடங்குகிறது. இரவு முழுவதும் பொழியும் பனி, காலை எட்டு மணி வரை நீடிக்கிறது. கடந்த வாரம் பெய்த தொடர் மழையின் காரணமாக பனிப்பொழிவு இல்லாமல் இருந்தது.
பெங்களூரு ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து!
தற்போது மழைப்பொழிவு இல்லாததால் பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. இச்சூழலில் இன்று (நவ.11), மாவட்டத்திலுள்ள பாப்பிரெட்டிபட்டி, அரூர் நகரம், மொரப்பூர், பெத்தூர், கொளகம்பட்டி, சென்னீர்குப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் கடும் பனிபொழிவு ஏற்பட்டது.
கடும் பனிப்பொழிவின் நடுவே நடந்து செல்லும் நபர் அதிகாலை போலவே காலை 8 மணி ஆகியும், பனிமூட்டம் குறையாமல் காணப்பட்டது. காலை நேரங்களில் சாலையில் எதிரே வரும் ஆட்கள் தெரியாத அளவிற்கு பனிப்பொழிவு அதிகமாக இருந்தது. இதனால் சாலையில் வரும் வாகனங்கள், முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு சென்றன.
தர்மபுரி மாவட்டத்தின் பனிப் பொழிவு