தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வீடுகளுக்குள் புகுந்த மழைநீர் - தருமபுரியில் மக்கள் அவதி - dharmapuri rain issues

தருமபுரி: கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் பெய்துவரும் கனமழையால், தருமபுரியின் பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் வீட்டுக்குள் புகுந்துள்ளது.

dharmapuri

By

Published : Sep 24, 2019, 2:26 PM IST

தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்துவருகிறது. இந்நிலையில் நேற்று மற்றும் நேற்று முன்தினம் பெய்த கனமழையால் குமாரசாமிபேட்டை, சத்யா நகர், எம்ஜிஆர் நகர், டிஎன்வி நகர் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள வீடுகளில் மழைநீர் புகுந்துள்ளது.

குமாரசாமிபேட்டை மேம்பாலம் அருகேயுள்ள பெட்ரோல் சேமிப்பு

இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்கை வெகுவாக பாதித்துள்ளது. மேலும் குமாரசாமிபேட்டை மேம்பாலம் அருகேயுள்ள பெட்ரோல் பங்க் பகுதியில் சுமார் இரண்டு அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் அவ்வழியே செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

மேலும், தருமபுரியில் கடந்த இரண்டு தினங்களில் மட்டும் 131 மி.மீ. மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details