தருமபுரி மாவட்டம் ஜருகு பகுதியைச் சேர்ந்தவர் முனுசாமி (25). இவர் தனது உறவினர் கஸ்தூரியுடன் கடந்த மே மாதம் 1ஆம் தேதி ஒகேனக்கல் வனப்பகுதியில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பென்னாகரம் மடம் இருளர் காலனி செல்வம்(40) முனுசாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
நாட்டுத் துப்பாக்கியால் சுட்டு ஒருவர் கொலை! - கொலை
தருமபுரி: நாட்டுத் துப்பாக்கியால் முனுசாமி என்பவரை சுட்டுக்கொலை செய்தவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
gundas
அப்போது இருவருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த செல்வம் நாட்டுத் துப்பாக்கியால் முனுசாமியை சுட்டதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் மலர்விழி உத்தரவின் பேரில் ஒகேனக்கல் காவல் ஆய்வாளர் பாஸ்கர் பாபு, செல்வத்தை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தார்.