தருமபுரி மாவட்டம் அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நவீன வசதியுடன் கூடிய கழிப்பறை கட்டுமான பணியை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் தொடங்கி வைத்தார். அதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "நாடாளுமன்ற தேர்தல் வாக்குறுதியின்படி 2019-20 நாடாளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் முதல் பணியாக 3500 மாணவியர் படித்து வரும் தருமபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நவீன வசதிகளுடன் கூடிய கழிப்பிட கட்டுமானம் தொடங்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் இந்தாண்டு தருமபுரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 8 பள்ளிகளில் நவீன கழிப்பிடங்கள், 11 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட உள்ளது. பள்ளியில் படிக்கும் மாணவியருக்கு இலவச நாப்கின்கள் வழங்க தன்னார்வலர்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளின் இலவச மின்சார விவகாரத்தில் தமிழ்நாடு அரசு இரட்டை நிலைப்பாடு கொண்டுள்ளது.