தருமபுரி: தருமபுரி மாவட்ட வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் குழுத்தலைவர் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் டி.என்.வி.எஸ்.செந்தில்குமார் தலைமையில் இன்று (ஆக.29) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்றபோது செல்போனில் கேம் விளையாடியும் தூங்கித் தூங்கி விழுந்த அரசு துறை அதிகாரிகள் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் மாவட்ட வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுத்தலைவர் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் டி.என்.வி.எஸ்.செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு உறுப்பினர் செயலாளரும் மாவட்ட ஆட்சிருமான சாந்தி முன்னிலை வகித்தார்.
இதையும் படிங்க:புதுக்கோட்டையில் தொடரும் தீண்டாமை சர்ச்சை.. இந்து அறநிலையத் துறை அலுவலகத்தை முற்றுகையிடக் காரணம் என்ன?
தருமபுரி மாவட்டத்தின் வளர்ச்சிக்காகவும், மேம்பாட்டிற்காகவும் மத்திய மாநில அரசுகளின் நிதி ஒதுக்கீடுகளின் மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்தகைய அரசின் திட்டங்களை விரைந்து செயல்படுத்தி, மாவட்டத்தின் வளர்ச்சிக்கும், மக்களுக்கான வளர்ச்சிக்கும் அடித்தளமிட்டு, அத்தகைய திட்டங்களை அரசுத்துறை அலுவலர்கள் முழுமையாக நிறைவேற்றிட வேண்டும் எனவும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் மத்திய அரசுத் திட்டங்களைச் செயல்படுத்துவதைக் கண்காணித்திடும் பொருட்டு மாவட்ட வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் மூன்று மாத்திற்கு ஒருமுறை நடத்தப்படுகிறது.