தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாணவிக்குப் பாலியல் தொந்தரவு அளித்த அரசு பள்ளி ஆசிரியர் கைது! - Government school Teacher held under POCSO Act

தர்மபுரி: அரசு பள்ளியில் பயிலும் ஒன்பதாம் வகுப்பு மாணவிக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த அரசு பள்ளி ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்தனர்.

பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர்
அரசு பள்ளி ஆசிரியர் கைது

By

Published : Apr 22, 2021, 5:46 PM IST

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி ஒன்றில் உலர் உணவு பொருட்களைப் பெற வந்த ஒன்பதாம் வகுப்பு மாணவிக்கு, அதே பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் கோவிந்தன் என்பவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக்கூறப்படுகிறது.

பாதிப்புக்குள்ளான மாணவி தன் வீட்டிற்குத் திரும்பியதும், சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், அரசு பள்ளி ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவரை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

மாணவியின் தாய், அரசு பள்ளிக்கு சென்று மகளிடம் தவறாக நடந்துகொண்ட ஆசிரியர் கோவிந்தனை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details