அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு 10 விழுக்காடு அகவிலைப்படியை தமிழ்நாடு அரசு அறிவித்தது. இந்த அகவிலைப்படியை 20 விழுக்காடாக உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தருமபுரி அரசு போக்குவரத்து அலுவலகம் எதிரே தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து துறை ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தருமபுரி பாரதிபுரம் பகுதியில் உள்ள அரசு போக்குவரத்து மண்டல அலுவலகம் முன்பு, தருமபுரி சேலம் பிரதான தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.