தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தருமபுரியில் அரசுப் பேருந்து ஜப்தி!

தருமபுரி: விபத்தில் உயிரிழந்தவருக்கு ரூ. 23 லட்சம் இழப்பீடு வழங்காததால், நீதிமன்ற உத்தரவுப்படி அரசுப் பேருந்து ஜப்தி செய்யப்பட்டது.

அரசுப் பேருந்து ஜப்தி
அரசுப் பேருந்து ஜப்தி

By

Published : Jan 6, 2021, 6:52 AM IST

தருமபுரி மாவட்டம் வேப்பமரத்து கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன்(30). இவர் கடந்த 2015ஆம் ஆண்டு தூதரையான் கொட்டாய் அருகே அரசுப் பேருந்து மோதியதில் உயிரிழந்தார்.

இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரசு போக்குவரத்து கழகம் ரூ. 23 லட்சம் நஷ்டஈடு வழங்க நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

நஷ்டஈடு வழங்காததால், உத்தரவை நிறைவேற்றக்கோரி பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மீண்டும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து, அரசுப் பேருந்தை ஜப்தி செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.

அதன்படி தருமபுரி பேருந்து நிலையத்தில் நின்ற அரசுப் பேருந்து ஜப்தி செய்யப்பட்டது.

இதையும் படிங்க: உயிரிழந்தவர் குடும்பத்துக்கு இழப்பீடு தொகை வழங்காத அரசுப் பேருந்து ஜப்தி!

ABOUT THE AUTHOR

...view details