தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘கரோனா தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்’- ஆட்சியரை வலியுறுத்திய ஜி.கே.மணி! - ஜி.கே.மணி

தர்மபுரி: கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த துரித நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பாமக தலைவர் ஜி.கே.மணி மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தினார்.

செய்தியாளர்களைச் சந்தித்த சட்டப்பேரவை உறுப்பினர்கள்
செய்தியாளர்களைச் சந்தித்த சட்டப்பேரவை உறுப்பினர்கள்

By

Published : May 18, 2021, 8:47 AM IST

தர்மபுரி பாலக்கோடு சட்டபேரவை உறுப்பினர் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் தலைமையில், பென்னாகரம் சட்டபேரவை உறுப்பினர் ஜி.கே.மணி உள்ளிட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் தர்மபுரி மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்தனர். கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த பாமக தலைவா் ஜி.கே. மணி கூறியதாவது, “தர்மபுரி மாவட்டத்தில் கரோனா பரவலை கட்டுப்படுத்த வேண்டும். தொற்று பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க படுக்கை வசதிகளை ஏற்படுத்த வேண்டும். தர்மபுரி மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவமனைகளில் படுக்கைகளை அதிகப்படுத்த வேண்டும்.

மாவட்டம் முழுவதும் படுக்கை இல்லாத நிலை நிலவி வருகிறது. தேவையானஅளவு ஆக்ஸிஜன் வழங்க வேண்டும். தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் யாரும் மருத்துவமனை வந்து இடமில்லாமல் திரும்ப செல்லக்கூடாது. அவர்களுக்கு சிகிச்சையளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

அனைவருக்கும் தடுப்பூசி வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். கிராமப் புறங்களில் அதிகளவு பொதுமக்கள் காய்ச்சளால் பாதிக்கப்பட்டு வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். அதிகமான காய்ச்சல் முகாம்கள் நடத்தி நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க ஏற்பாடு செய்ய மாவட்ட ஆட்சியர், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் கரோனா தடுப்பு நடவடிக்கைக்கு குழு அமைக்கப்பட்டுள்ளது. கரோனா தடுப்பு குழுவில் தமிழ்நாடு முதலமைச்சர் என்னையும் நியமனம் செய்ததை வரவேற்கிறேன்” என்றார்.

இது குறித்து பேசிய முன்னாள் அமைச்சரும் பாலக்கோடு சட்டப்பேரவை உறுப்பினருமான கே.பி. அன்பழகன் கூறியதாவது, “மாவட்ட மக்கள் கரோனா அறிகுறி தெரிந்தவுடன் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். மூச்சுத் திணறல் ஏற்படும் வரை காத்திருந்து சிகிச்சைப் பெற வருவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

செய்தியாளர்களைச் சந்தித்த சட்டப்பேரவை உறுப்பினர்கள்

மாவட்டத்திலுள்ள பென்னாகரம், பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் பகுதியிலுள்ள மருத்துவமனைகளில் நாளை (மே 18) முதல் ஆக்ஸிஜன் வசதியூடன் மருத்துவமனையில் 25 படுக்கை வீதம் 100 படுக்கை வசதி நாளை செயல்பாட்டுக்கு வர உள்ளது” எனத் தெரிவித்தார். மாவட்ட ஆட்சியருடன் நடந்த இந்த சந்திப்பில் பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவை உறுப்பினர் கோவிந்தசாமி, தர்மபுரி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பி. வெங்கடேஸ்வரன், அரூர் சட்டப்பேரவை உறுப்பினர் சம்பத்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: கரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையத்தினை திறந்து வைத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ABOUT THE AUTHOR

...view details