தமிழ்நாடு

tamil nadu

கர்நாடக அரசை எதிர்த்துப் போராட வேண்டும் - ஜி.கே.மணி

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக, கர்நாடக அரசை எதிர்த்துப் போராட வேண்டும் என பென்னாகரம் சட்டபேரவை உறுப்பினர்ருமான ஜி.கே. மணி தெரிவித்துள்ளார்.

By

Published : Aug 30, 2021, 6:29 PM IST

Published : Aug 30, 2021, 6:29 PM IST

dharmapuri  gk mani press meet  gk mani press meet at dharmapuri  dharmapuri news  dharmapuri latest news  mekedatu dam  school opening  school reopen  tamilnadu government  pmk leader  தர்மபுரி செய்திகள்  போராட்டம்  மேகேதாட்டு அணை  மேகேதாட்டு அணை விவகாரம்  பள்ளிகள் திறப்பு  ஜி.கே.மணி  செய்தியாளா்களை சந்தித்த ஜி.கே.மணி  தர்மபுரியில் செய்தியாளர்களை சந்தித்த ஜி கே மணி
ஜி.கே.மணி

தர்மபுரி: பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும், பென்னாகரம் சட்டப்பேரவை உறுப்பினர்ருமான ஜி.கே.மணி இன்று (ஆக 30) தர்மபுரியில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அதில் பேசிய அவர், “மேகதாது பகுதியில் காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டுவதில் பிடிவாதமாக உள்ளது. தமிழ்நாடு அரசு தலைமையில் அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் எதிர்க்கும் ஒரே நிலைப்பாட்டில் உள்ளனர்.

அமைதி வழியில் போராட்டம்

அமைச்சர் துரைமுருகன் தலைமையில் அனைத்து கட்சி குழு, ஒன்றிய அமைச்சர் சந்தித்தபோது, ஒன்றிய அமைச்சர், தமிழ்நாடு அரசின் அனுமதி இல்லாமல் அணை கட்ட முடியாது என்று தெரிவித்தார்.

ஆனால் கர்நாடக முதலமைச்சர், ‘எங்களுக்கு தமிழ்நாடு அனுமதி தேவையில்லை. அணை கட்டியே தீருவோம்’ என்று சொல்கிறார். தமிழ்நாடு அரசு உறுதியாக இருந்து, அனைத்து கட்சியின் ஆதரவோடு, மேகதாது பகுதியில் அணை கட்டக்கூடாது என்று முனைப்பாக செயல்பட வேண்டும்.

ஒன்றிய அரசு, கர்நாடக அரசின் கவனத்தை ஈர்க்க அமைதி வழியில் அறவழியில் போராட்டம் செய்ய வேண்டும் என்பது என் கருத்து. சமூக இடைவெளியோடு அமைதி வழியில் போராட்டம் நடத்த வேண்டும். தமிழ்நாட்டின் உரிமையை காப்பதற்கு ஒட்டுமொத்த தமிழ்நாடும் ஒரே குரலில் இன்று இருக்கிறது. இது தொடர்ந்து நீடிக்க வேண்டும்.

செய்தியாளா்களை சந்தித்த ஜி.கே.மணி

பள்ளிகள் திறப்பதில் அவசரம் வேண்டாம்

இதையடுத்து ஒன்றாம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. கரோனா பரவல் காலமென்பதால் மாணவர்கள் எண்ணிக்கையை அளவீடு செய்து வகுப்புகள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பெற்றோர்களும் ஆசிரியர்களும் கவனமாக இருக்க வேண்டும்.

ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை செப்டம்பர் 15ஆம் தேதி திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொறுத்திருந்து பார்த்து திறக்கவேண்டும், அவசரப்படக் கூடாது. ஒன்றாம் தேதி பள்ளி திறப்பை முன்மாதிரியாகக் கொண்டு முடிவு செய்ய வேண்டும்” என்று கூறினார்.

அரசின் செயல்பாடு வளர்ச்சியை நோக்கி

பின்னர் தமிழ்நாடு அரசின் செயல்பாடு எப்படி இருக்கிறது என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு, “சட்டப்பேரவையில் பேசுவதற்கு அனைத்து கட்சிகளுக்கும் வாய்ப்புகள் வழங்கப்படுகிறது. தமிழ்நாடு அரசின் செயல்பாடு தற்போது வளர்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது” என தெரிவித்தார்.

மேலும் பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து அதிமுக கூட்டணியில் நீடித்து வருவதாகவும், தற்போது வரை அதிமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இருப்பதாகவும் பாமக தலைவர் ஜி.கே.மணி தெரிவித்தார்.

செய்தியாளா் சந்திப்பின் போது தருமபுரி சட்டபேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன், முன்னாள் எம்.எல்.ஏக்கள் பாரிமோகன், வேலுசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: எஸ்.சி., எஸ்.டி மாணவர்களுக்காக கட்டப்பட்ட விடுதிக் கட்டடங்களை திறந்துவைத்த ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details