தர்மபுரி: பாப்பாரப்பட்டி செல்லும் வழியில் உள்ளது எர்ரம்பட்டி கிராமம். இங்குள்ள கோயிலுக்கு பின்புறமாக சிலர் சூதாடும் காணொலி ஒன்று வெளியாகியுள்ளது.
ஊரடங்கில் லட்சக்கணக்கில் பணம் வைத்து சூதாட்டம்: நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை - சூதாட்டம்
பாப்பாரப்பட்டி அருகே ஊரடங்கு காரணமாக வேலையில்லாமல் வீட்டில் உள்ள இளைஞர்கள் பணம் வைத்து சீட்டு விளையாடி வருவதாக புகார் எழுந்துள்ளது. லட்சக் கணக்கில் பணம் வைத்து இந்த விளையாட்டில் ஈடுபடுவதால் சிலர் பணத்தை இழக்கும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
இப்பகுதியில் இளைஞர்கள் முதல் பெரியவாகள் வரை 40க்கும் மேற்பட்டவர்கள் தினமும் காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரை விளையாடி வருவதாகவும், நாளொன்றுக்கு லட்சக்கணக்கில் பணம் கைமாறுவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
ஊரடங்கைப் பயன்படுத்தி சீட்டு ஆட்டத்தின் மூலம் சூதாடி ஏழை எளியவர்கள் பணத்தை இழக்கும் அபாயம் இதனால் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சூதாடும் நபர்கள்மீது வழக்குப்பதிவு செய்து, காவல் துறையினர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.