தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தர்மபுரியில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து - சரக்கு ரயில் விபத்து

பொம்மிடி அருகே சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளான இடத்தை, ரயில்வே அலுவலர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

விபத்து
விபத்து

By

Published : Jun 28, 2021, 7:47 AM IST

தர்மபுரி: சேலத்தில் இருந்து ஜோலார்பேட்டைக்குச் சென்ற சரக்கு ரயில், தர்மபுரி மாவட்டம், பொம்மிடி ரயில் நிலையம் அருகே நேற்று (ஜூன் 27) சென்று கொண்டிருந்தது.

அப்போது மோரூர் என்ற இடத்திற்கு அருகே வந்தபோது, எதிர்பாராதவிதமாக ரயிலின் கடைசிப்பெட்டி இணைப்பு துண்டிக்கப்பட்டு தடம் புரண்டது.

இதில் நல்வாய்ப்பாக உயிர், பொருள் சேதம் ஏற்படவில்லை.

தடம்புரண்ட ரயிலை ஆய்வு செய்த அலுவலர்கள்

சரக்கு ரயில் தடம் புரண்டது குறித்து சேலம் ரயில்வே கோட்ட அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சேலம் ரயில்வே கோட்ட அலுவலர்கள், காவல் துறையினர் சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

தடம் புரண்ட சரக்கு ரயிலை மீட்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர்.

விபத்துக்காரணமாக போக்குவரத்து தடைபட்டதால், சென்னை மார்க்கத்தில் செல்லும் ரயில்கள் ஆங்காங்கே ரயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டன.
இதையும் படிங்க:குமரியில் நாளை முதல் பேருந்துகள் இயக்கம்: முழு வீச்சில் பராமரிப்புப் பணி

ABOUT THE AUTHOR

...view details