தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இலவச வீட்டுமனைப்பட்டா விவகாரம்; இண்டூரில் கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம் - Dharmapuri Free Housing News

தர்மபுரி அடுத்த பழைய இண்டூரில் இலவச வீட்டு மனைப்பட்டா கேட்டு 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அம்பேத்கர் சிலை அருகில் உண்ணாவிரதப் போராட்டத்தில் நடத்தி வருகின்றனர்.

இலவச வீட்டு மனை பட்டா விவகாரம்; இண்டூரில் கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டம்
இலவச வீட்டு மனை பட்டா விவகாரம்; இண்டூரில் கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டம்

By

Published : Jan 26, 2023, 10:41 PM IST

இலவச வீட்டு மனை பட்டா விவகாரம்; இண்டூரில் கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டம்

தர்மபுரிஅருகே நல்லம்பள்ளி வட்டத்திற்குட்பட்ட பழைய இண்டூர் அம்பேத்கர் காலனியில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இலவச வீட்டுமனைப் பட்டா கேட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு வழங்கியுள்ளனர். இதனையடுத்து கடந்த 2013ஆம் ஆண்டு ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் வீட்டுமனை பட்டா வழங்குவதற்கு, கிராமத்தின் அருகில் சுமார் ஐந்து ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி உள்ளனர்.

இந்த இடத்தில் இலவச வீட்டு மனைப் பட்டா கேட்டு விண்ணப்பித்திருந்த சுமார் 100 பேருக்கு பட்டா வழங்குவதற்காக அரசு நடவடிக்கை எடுத்து வந்துள்ளது. இதனைத்தொடர்ந்து முதற்கட்டமாக ஏழு பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது.

மேலும், இதனை அறிந்த நிலத்தின் உரிமையாளர் வீட்டுமனைப் பட்டா வழங்க நிலம் வழங்க முடியாது என நீதிமன்றத்திற்குச் சென்று தடையாணைப் பெற்றுள்ளார். இதனால் இந்த பகுதியில் உள்ள மக்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்குவதில் கால தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக பழைய இண்டூர் டாக்டர் அம்பேத்கர் நகர் மக்கள் இலவச வீட்டு மனைப்பட்டா கேட்டு, மாவட்ட ஆட்சியர், அமைச்சர், முதலமைச்சரின் தனிப்பிரிவு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் புகார் மனு அளித்து வந்துள்ளனர். ஆனால் கிராம மக்களின் கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்கவில்லை எனத் தெரிகிறது.

இன்று(ஜன.26) குடியரசு தின நாளில் பழைய இண்டூர் அம்பேத்கர் சிலை முன்பு கிராம மக்கள் 200க்கும் மேற்பட்டோர் இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி ஒரு நாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் கிராமத்தில் உள்ள ஆண், பெண் குழந்தைகள் என குடும்பத்தோடு அம்பேத்கர் சிலை முன்பு அமர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் நடத்தி வருகின்றனர்.

இதனை அறிந்த இண்டூர் காவல் துறையினர், வருவாய்த் துறையினர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தங்களுக்குத் தீர்வு கிடைக்கின்ற வகையில் தொடர்ந்து போராட்டம் நடத்துவோம் என தெரிவித்து கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் வருவாய்த் துறையினர், காவல் துறையினர் கிராம மக்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:"திமுக விரைவில் குப்பை மேட்டிற்கு வரும்" - முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ!

ABOUT THE AUTHOR

...view details