தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஒரே இருசக்கர வாகனத்தில் சென்ற நான்கு பேர் படுகாயம்! - பேருந்தின் மீது நிலைதடுமாறி இருசக்கர வாகனம் மோதி விபத்து

தருமபுரி: அரூர் - சேலம் பைபாஸ் சாலையில் ஒரே இருசக்கர வாகனத்தில் சென்ற நான்கு பேர் நிலைதடுமாறி கீழே விழுந்ததில், பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

four-injured-in-motorcycle-accident
four-injured-in-motorcycle-accident

By

Published : Feb 21, 2020, 8:14 AM IST

சேலம் மாவட்டம், வீராணம் அருகே தாதனூர் கிராமத்தைச் சார்ந்த மூக்கன் என்பவரது மகன்கள் ஜெயக்குமார் (26), கார்த்திக் (25) மற்றும் கேசவன் (22), மோகன்ராஜ் (22) ஆகிய நான்கு பேர் ஒரே இருசக்கர வாகனத்தில் தருமபுரி மாவட்டம், அரூர் - சேலம் பைபாஸ் ரோட்டில் சென்றுள்ளனர்.

அப்போது, அங்குள்ள பெட்ரோல் பங்க் ஒன்றின் அருகே இவர்கள் வந்தபோது, எதிரே வேலூரில் இருந்து சேலம் நோக்கி சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்தின் மீது நிலைதடுமாறி இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற நான்கு பேரும் படுகாயமடைந்துள்ளனர். இதனையடுத்து அப்பகுதி மக்கள் உடனடியாக 108 அவரச ஊர்திக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, விபத்தில் சிக்கிய நான்கு பேரையும் மீட்டு அரூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அதில் அண்ணன் தம்பிகளான, கார்த்திக், ஜெயபிரகாஷ் இருவரும் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

ஒரு இருசக்கர வாகனத்தில் சென்ற நான்கு பேர் படுகாயம்

மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே இருசக்கர வாகனத்தில் சென்ற அண்ணன், தம்பி உள்பட நான்கு பேர் விபத்துகுள்ளான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: இரண்டு வருடங்களாக காவல் துறைக்கு டிமிக்கி கொடுத்த பைக் திருடர்கள் கைது!

ABOUT THE AUTHOR

...view details